மடத்துக்குளம் அருகே திருநங்கை தற்பலிசிற்பம் கண்டுபிடிப்பு

5பார்த்தது
மடத்துக்குளம் அருகே திருநங்கை தற்பலிசிற்பம் கண்டுபிடிப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் குதிரை ஆற்றங்கரையில் உள்ள பாழடைந்த கோவிலை வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு செய்தபோது, கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநங்கை தற்கொலை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. அலங்காரங்களுடன் ஒரு திருநங்கை தன் தலையை தானே அறுத்துக் கொள்வது போன்ற சிற்பம் அமைந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகவும், மக்களுக்காகவும் அரசு நிலங்களை கொடையாக அளிக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி