மடத்துக்குளத்தில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை

2பார்த்தது
மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தாய் மண் அலுவலகத்தில் நவம்பர் 26 அன்று அரசமைப்புச் சட்டம் அரங்கேறிய நாளில் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக மாநில துணைத்தலைவர் சிடிசி சத்தியமூர்த்தி, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் அப்பன்குமார், முன்னாள் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சக்தி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாறை நித்தியபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.