திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக, தவெக மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திமுக நிர்வாகி ஒருவர் குடுகுடுப்புக்காரர் போல பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மடத்துக்குளம் தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.