திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே திருமூர்த்தி அணையின் மூலமாக பிஏபி பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது 3-ம் மண்டல பாசனத்திற்கு 2-ம் சுற்று தண்ணீர் செல்கிறது. விவசாயிகளும் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை பிஏபி கால்வாயில் ஜல்லிபட்டி, ஒனாக்கல்லூர், பள்ளபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் மரக்குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக தெரிகிறது. அவை சட்டர் பகுதியில் தேங்கி தண்ணீரின் போக்கிற்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதகுகளில் சிக்கி உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.