மடத்துக்குளம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

1பார்த்தது
மடத்துக்குளம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சாமராயபட்டி பிரிவில் சாலையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆனால், சில நாட்களாக இந்த பகுதிகளில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குப்பைகளை அகற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.