திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மைவாடி பிரிவு பகுதியில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சாலையில் நடந்து வந்த வசந்தா என்ற பெண் படுகாயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.