
மடத்துக்குளம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு - அலட்சியம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் காரத்தொழுவு சாலைகளில் திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதன் மூலம் ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைத்து வருகிறது. வஞ்சிபுரம் அருகே ஏற்பட்டுள்ள இந்த உடைப்பால் பல வாரங்களாக தண்ணீர் வீணாகி வருவதால், அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




































