பல்லடத்தில் வீடு புகுந்து 18 சவரன் நகை திருட்டு

4பார்த்தது
பல்லடத்தில் வீடு புகுந்து 18 சவரன் நகை திருட்டு
பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த யூஜின் (58) என்பவர், வெள்ளிக்கிழமை அன்று வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியே சென்றார். மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த தம்பதி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 18 சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து யூஜின் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.