அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

535பார்த்தது
அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பல்லடம் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் புத்தரச்சல் பாபு, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வெங்கடாசலபதி, அவைத்தலைவர் சிவாச்சலம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர்பந்தல் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவசாமி பேசுகையில், "அ.தி.மு.க. தற்போது புனிதமாகிவிட்டது" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி