நடுரோட்டில் கவிழ்ந்த டிப்பர் லாரி ரோடு எல்லாம் சிந்திய ஜல்லி

5பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில், லட்சுமி மில்ஸ் அருகே சரஸ்வதி அண்ட் கோ நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றதால், சாலையின் இடைத்தடுப்பில் இருந்த பேரிகார்டுகளில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த ஜல்லிகள் சாலையில் சிதறி கிடந்தன. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி