கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடத்தில், மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் வாகனப்
போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சுப முகூர்த்த நாட்களில்
போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. நேற்று ஏற்பட்ட கடும் நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று நீண்ட நேரம் சிக்கித் தவித்தது. சைரன்கள் ஒலித்தும் வாகனங்கள் நகரவில்லை.