திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் பீட்ரூட் சாகுபடி படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மகசூல் திருப்திகரமாக அமைவதோடு, வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 15 டன் வரை மகசூல் கிடைப்பதாகவும், 25 கிலோ கொண்ட பை ரூ. 400-க்கு விற்பனையாகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக நடைபெற்ற பீட்ரூட் சாகுபடி, உரிய விலை கிடைக்காததாலும், மகசூல் குறைந்ததாலும் குறைந்தது.