கோவை மாவட்டம், சூலூரில் வசிக்கும் 40 வயது காா்த்திக், பல்லடத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். சனிக்கிழமை காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பின்னர், காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.