பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் மற்றும் பூச்சாட்டல் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.