ஈரோடு: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து

1973பார்த்தது
ஈரோடு: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து
கோவை-ஈரோடு இடையே அரசுப் பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் இன்று (பிப்ரவரி 18) காலை இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, அரசுப் பேருந்து மீது மோதியதில் இரு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி