பல்லடம்: 5 டன் ரேஷன் அரிசி பிடிபட்டது

1138பார்த்தது
பல்லடம்: 5 டன் ரேஷன் அரிசி பிடிபட்டது
திருப்பூர், பல்லடம் ரோட்டில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். ராயர்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசால் இலவசமாக வழங்கப்படும் 5 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சரக்கு வாகனத்தில் இருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி