திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே புத்தரச்சலில் காரில் கணவன், மனைவி இருவரும் சாணி பவுடர் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டனர். கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் என். ஜி. ஆர். காலனியில் வசிக்கும் கணேசன் (62) மற்றும் அவரது மனைவி வசந்தாமணி (57) ஆகியோர் தாராபுரம்-பல்லடம் சாலையில் உள்ள புத்தரச்சலில் காரில் தற்கொலை செய்து கொண்டனர். கணேசன் நரம்பு பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.