பல்லடம் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில், போக்குவரத்து மற்றும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், அதிநவீன ANPR எனப்படும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா பல்லடம் சரக உதவி ஆணையர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்லடத்தைச் சுற்றிலும் இதுவரை 2500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல்லடம், காமநாயக்கன்பாளையம், அவிநாசி பாளையம், பொங்கலூர் உள்ளிட்ட சரக காவல் நிலையப் பகுதிகளுக்கு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தெருவுக்குத் தெரு, கிராமத்துக்கு கிராமம் 2500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.