திருப்பூர் உடுமலை அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சி பகுதியில் விவசாயி லட்சுமண சாமி மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து பயிரை நாசம் செய்துள்ளன. இதனால் விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.