திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசுவம்பாளையம் ரோட்டில் வசிக்கும் அபினேஷ் (20), பிறந்த நாள் முதல் இன்று வரை பால் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார். இரண்டு காதுகளும் இல்லாததாலும், உணவுக் குழாய் சிறியதாக இருப்பதாலும் அவரால் பால் மட்டுமே அருந்த முடிகிறது. வாய் பேச முடியாத நிலையில் உள்ள இந்த அதிசய வாலிபருக்கு, தமிழக அரசு ஒரு ஆவின் பாலகம் அமைத்து கொடுத்துள்ளது. அதை நடத்தி தனது ஜீவனாம்சத்தை ஈட்டி வருகிறார்.