கோவையில் இருந்து திருச்சிக்குச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேருந்தின் இன்ஜின் பகுதியிலிருந்து புகை வந்து தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர், பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டார். பல்லடம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடு இரவில் பேருந்து தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.