கோவை ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த சபரீஷ்வரன் (23) என்பவர், வெள்ளிக்கிழமை தனது சகோதரியைப் பார்க்க பல்லடம் வந்து தங்கியுள்ளார். சனிக்கிழமை காலை அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது சபரீஷ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பல்லடம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.