பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலை வடுகபாளையம் பகுதிக்குள் சனிக்கிழமை மாலை புகுந்த மான் ஒன்றை நாய்கள் துரத்தியதில், அது தென்னந்தோப்புக்குள் தப்பிச் சென்றது. பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் திருப்பூா் வனத் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து மானை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரமானதால், மான் பிடிக்கும் பணி தொடரும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.