மாணிக்காபுரம் ஊராட்சி பகுதியில் எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அங்கு அளவீடு பணி நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு, வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், குடிசை அமைப்பதற்காக ஓலை, மூங்கிலுடன் வந்த அவர்களை பல்லடம் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பணி தற்காலிகமாக தடைபட்டது.