பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் உலக நலன் வேண்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காமாட்சிபுரி 2-ம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.