தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தநிலையில், இன்று(மே.19), கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.