பல்லடத்தில் 10 கிலோ புகையிலை பொருட்கள் விற்க முயன்ற இருவர் கைது

822பார்த்தது
பல்லடத்தில் 10 கிலோ புகையிலை பொருட்கள் விற்க முயன்ற இருவர் கைது
பல்லடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த யதேந்திரசிங் (42) மற்றும் பல்லடம் காளிவேலம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (49) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பல்லடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 10 கிலோ 230 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.