பல்லடம் அருகே பழனிச்சாமி விவசாய தோட்டத்தில் அவரது குடும்பத்தினர் மோகன், ருக்மணி, சுகன்யா ஆகியோர் இருந்தபோது, உறவினர்களான ராஜா, மணி, சின்னசாமி, பெரியசாமி, சந்தோஷ், பூபதி, பிரேமா, நந்தினி ஆகியோர் கடந்த 3ஆம் தேதி அவர்களை உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். 20 சென்ட் நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவிநாசிபாளையம் போலீசார் ராதாமணி, சின்னசாமி, பெரியசாமி ஆகியோரை கைது செய்துள்ளனர்.