பல்லடம்: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

1009பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் புதூரில் 2000 குடும்பங்களுக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் நகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி