ரெயில் மோதி பலியானவர் யார்? போலீஸ் விசாரணை

0பார்த்தது
ரெயில் மோதி பலியானவர் யார்? போலீஸ் விசாரணை
திருப்பூர்-சோமனூர் இடையே சோமனூர் பாலம் அருகே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி உடல் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்ததும் திருப்பூர் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விபத்தில் இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி