பல்லடம்: ரூ.15 ஆயிரம் லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ கைது

82பார்த்தது
பல்லடம்: ரூ.15 ஆயிரம் லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ கைது
திருப்பூர், பல்லடம் அடுத்த, கே.அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (38). இவர் அரசு பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் ஒப்பந்த உரிமம் புதுப்பிக்க சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு கே.அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். 

அந்த சான்றிதழை கையெழுத்திட்டு அடுத்த நிலை அதிகாரிகள் மற்றும் தாசில்தாருக்கு அனுப்ப கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகாரளித்துள்ளார். 

புகாரையடுத்து ரசாயணம் தடவிய ரூ.15 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கதிர்வேலிடம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து கதிர்வேல் லஞ்சப்பணத்தை ரேவதியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் சசிரேகா உள்ளிட்ட போலீசார் ரேவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

மேலும் லஞ்சப்பணம் ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சொத்து மதிப்பு சான்றிதழ் பெற லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி