பல்லடம்: வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வாலிபர் கைது

1081பார்த்தது
பல்லடம்: வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வாலிபர் கைது
பல்லடம் அருகே கல்லம்பாளையத்தில் வசிக்கும் 70 வயது தெய்வசிகாமணி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த மதுரையைச் சேர்ந்த அஜித் குமார் (30) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர்தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி