
போஸ்டரால் பரபரப்பு
திருப்பூர் மாநகராட்சி 34-வது வார்டு பாளையக்காடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் விரிவாக்கப் பணியால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.







































