திருப்பூர் மாவட்டத்தில் 10 வேட்புமனுக்கள் வாபஸ்

2பார்த்தது
திருப்பூர் மாவட்டத்தில் 10 வேட்புமனுக்கள் வாபஸ்
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் கடைசி நாளான நேற்று, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 10 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 பேர், காங்கயம் தொகுதியில் 2 பேர், பல்லடம் தொகுதியில் 4 பேர், திருப்பூர் வடக்கு மற்றும் உடுமலை தொகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 10 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 134 வேட்பாளர்கள் தாக்கல் செய்த 183 வேட்புமனுக்களில், தற்போது போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை உறுதியாகியுள்ளது.