திருப்பூரில் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் சுஜாத் அலி பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 10 அம்ச கோரிக்கைகள் குறித்து சாதகமான அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். ஒருவேளை சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை எனில், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திலும், தேர்தல் பணிகளை புறக்கணிப்பிலும் ஈடுபடப்படும் என அவர் எச்சரித்தார்.