17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் காதலன் கைது

1பார்த்தது
17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் காதலன் கைது
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த இளவரசன் (22) என்பவர், திருப்பூர் ஓடக்காடு பகுதியில் தங்கி பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், 17 வயது சிறுமியை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் தந்தையும் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை மற்றும் காதலன் இளவரசன் கைது செய்யப்பட்டனர். தந்தை மற்றும் காதலன் சேர்ந்து சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி