திருப்பூர்- மங்கலம் சாலை கருவம்பாளையம் தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவரும் இவருடைய நண்பர் சரவணகுமார் தெற்கு தோட்டம் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன் (20), யுவன் ஸ்ரீ (22) ஆகியோர் கொடுக்கல் வாங்கல் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் யுவன் ஸ்ரீ ஆகியோர் கார்த்திக், சரவணகுமாரை கடுமையாகத் தாக்கினர். இதில் சரவணகுமாருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் மத்திய போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், யுவன் ஸ்ரீ ஆகியோரைக் கைது செய்தனர்.