திருப்பூர்: புகையிலை பொருட்களுடன் மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

56பார்த்தது
திருப்பூர்: புகையிலை பொருட்களுடன் மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது
திருப்பூர் வடக்கு போலீசார் குமரானந்தபுரம் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கடைக்காரர் மாரிச்சாமியை (வயது 30) கைது செய்து அவரிடம் இருந்து 4½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோல் ரெயில் நிலையம் முன்புறம் வடக்கு போலீசார் நடத்திய சோதனையில் 3 கிலோ புகையிலை பொருட்களு டன் வந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவர் ஒடி சாவை சேர்ந்த சித்தரஞ்சன் மாலிக் (26) என்பதும், புகை யிலை பொருட்களை விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. வடக்கு போலீசார் சித்தரஞ்சன் மாலிக்கை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி