திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 பங்களாதேஷ் நாட்டினருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களும் சட்டவிரோதமாக குடியேறி
வேலை பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 பேரை கைது செய்தனர்.