திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி செல்வக்குமார் (28) நேற்று முன்தினம் இரவு
வேலை முடிந்து வீடு திரும்பும்போது, சேசன் வீதி அருகே 4 பேர் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர், செல்வக்குமாரின் தலையில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.