பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 22). இவர் திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த கங்காநகர் பகுதி யில் தங்கி, செங்கப்பள்ளியைச் சேர்ந்த சுகுணன் (41) என்ப வரிடம் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலை யில் நேற்று முன்தினம் ராஜா தனது சம்பள பணத்தை கேட் பதற்காக சுகுணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுகு ணன் வீட்டில் இல்லாததால் அவர் வீட்டின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த மொபட்டை ராஜா எடுத்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுகுணன் தனது நண்பர்களான பெரிய சாமி (46), பிரபு (46), துரைசாமி (43), கவுதமன் (41) ஆகி யோருடன் சேர்ந்து போயம்பாளையம் கங்காநகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ராஜாவை பிடித்து ரோட்டில் வைத்து தாக்கியதாக தெரிகிறது. மேலும் ராஜாவை அங்கிருந்து சரக்கு ஆட்டோவில் கடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராஜா கூச்சல் போட்டதால் பொதுமக்கள் அந்த 4 பேரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுணன், பெரியசாமி, பிரபு, துரைசாமி, கவுதம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.