ஆன்லைன் மூலம் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 4 பேர் கைது

திருப்பூரில் ஆன்லைன் மூலம் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தோஷ்குமார் என்ற தொழிலாளிக்கு வந்த குறுஞ்செய்தி மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அழகிகள் இருப்பதாகவும், பணத்தை அனுப்பினால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட செயலி மூலம் தொடர்பு கொண்டபோது, புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பட்டதாரி வாலிபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
