இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் வருகிற 7-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை முகூர்த்த தினங்கள் மற்றும் 9-ந்தேதி வைகாசி விசாகம் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக நாளை மாலை முதல் திருப்பூரில் இருந்து வெளிமாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு வசதியாக வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக 40 சிறப்பு பஸ்களும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 20 சிறப்பு பஸ்களும், திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 15 சிறப்பு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இவ்வாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.