திருப்பூரில் உள்ள பனியன் மற்றும் பிற நிறுவனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி வேலை செய்த வங்கதேச நாட்டினர் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நல்லூர் முஜியாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், போலி ஆதார் அட்டைகளுடன் தங்கியிருந்த 2 பெண்கள் உட்பட 9 வங்கதேசத்தினர் கியூ பிரிவு காவல்துறையினரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.