திருப்பூர்: பாலிதீன் பைகள் விற்ற 9 கடைகளுக்கு அபராதம்

84பார்த்தது
திருப்பூர்: பாலிதீன் பைகள் விற்ற 9 கடைகளுக்கு அபராதம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள், பாலிதீன் பைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

 இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக திருப்பூர் 2-வது மண்டலத்திற்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி மேற்பார்வையில், மாநகரநல அதிகாரி முருகானந்தம் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 9 வணிக நிறுவனங்களில் இருந்து 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி