சேவூர் அருகே உள்ள வேட்டுவபாளையம் ஊராட்சி அ. குரும்பபாளையம் கோண வேலாங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சிவராஜ். இவர் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். தனது மாட்டு கொட்ட கையில், வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு பசுமாடு களை கட்டி வைத்திருந்தார். திடீரென நேற்று அதிகாலை மாடுகளின் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த போது, 1½ வயதான பசுங்கன்றை நாய்கள் கடித்து குதறியது தெரியவந் தது. இதில் பலத்த காயமடைந்த பசுங்கன்று உயிரிழந்தது. இதுபற்றி அறிந்த வருவாய்த்துறையினர், கால்நடை பராமரிப் புத்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.