உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது. 10 வயது உட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். சிறப்பான ஓவியங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பரிசுகள் வழங்கப்படும்.