திருப்பூர் மாநகராட்சியின் 24-வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் மற்றும் 20-வது வார்டு கவுன்சிலர் குமார் ஆகியோர் நேற்று திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாநகரில் அதிகரித்து வரும் குப்பை, குடிநீர் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளை மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிப்பதற்கு வசதியாக, மாநகராட்சி கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில், குப்பை மேலாண்மை, குடிநீர் விநியோகம் குறித்து விவாதித்து தீர்வு காணும் வகையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.