அ. தி. மு. க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அ. தி. மு. க. பல்லடம் வடக்கு ஒன்றியம் சார்பில் பூமலூர், 63 வேலம்பாளையம் மற்றும் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளர் கரைப்புதூர் ஏ. நடராஜன் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அர்ஜூனன், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர்பந்தல் நடராஜன், பல்லடம் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் என்.கே. பரமசிவம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோகுல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.