பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், இருசக்கர வாகனத்தை பாடையில் ஏற்றியும், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செய்வது போலவும் நூதனமாக சித்தரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.